ஜெ. திறந்து வைக்கவுள்ள அதிமுக அலுவலகத்தில் விபரீதம்... மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் மரணம்!
தேனி: தேனியில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க இருக்கும் கட்சி அலுவலகத்தில் வேலை செய்த எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் கோடாங்கிப்பட்டி அருகே அதிமுக மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பூஜைபோட்டு துவங்கி வைத்தார். அலுலவகத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து வரும் 13 ஆம் தேதி ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதனை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்று அந்த அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர் சிலையும் நிறுவப்பட்டுவிட்டது.
அலுவலகத் திறப்பிற்கு இரண்டு நாட்களே இருப்பதால் மின் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணி நடந்தது வந்தது. அப்போது தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவரும், ஆதித் தமிழர் பேரவையில் பொறுப்பில் உள்ளவருமான சரவணன் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்போது மின்சாரம் தாக்கியது. துடிதுடித்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சரவணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சரவணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை மறைக்க முயற்சித்துள்ளனர் அதிமுகவினர். இருப்பினும் தற்போது இந்த விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications