சென்னை புற நகருக்கு கரண்ட் வர இன்னும் 3 நாள் ஆகும்.. அமைச்சர் தங்கமணி
சென்னையில் 90 சதவீதம் அளவுக்கு மின் வினியோகம் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் மின் வினியோகம் 90 சதவீதம் சீர் செய்யப்பட்டுவிட்டது என்று அத்துறை அமைச்சர் தங்கமணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வர்தா புயலால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் வினியோகத்தை முழுமையாக சீரமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போர்க்கால அடிப்படையில் பணி செய்ததன் காரணமாக, சென்னையில் மின் வினியோகம் 90 சதவீதம் சீர் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் 3 நாட்களில் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மின்சார விநியோகம் முழுமையாக சீர்செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையில் வர்தா புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளின் மின்தடை ஏற்பட்டது. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், மின்துறை ஊழியர்களும் கடந்த இரு தினங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications