மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்.. அமைச்சர் தங்கமணி கோரிக்கை
மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை வைத்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை வைத்து இருக்கிறார்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.

எனவே தமிழக மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கூறினார்கள். இதற்காக தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு ஊழியர்களை அழைத்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 12ம் இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சு வார்த்தையில் சரியான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் 15-ம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிஐடியு மாநில தலைவர் சுப்பிரமணியன் குறிப்பிட்டு இருந்தார்.
இதிலும் உடன்பாடு ஏற்படாததால் நாளை சில மின்வாரிய சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார்.
அதில் ''மின்வாரிய ஊழியர்களுடன் புதன்கிழமைக்குள் பேச்சுவார்த்தை நடத்துவோம். மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். மின்வாரிய சங்கங்கள் அரசியல் தூண்டுதலால் நாளை வேலை நிறுத்தம் செய்கிறது'' என்றுள்ளார்.
மேலும் ''பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலேயே வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாராவது மின்வெட்டு ஏற்படுத்தினால் அரசிடம் மக்கள் புகாரளிக்கலாம்'' என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications