கோவை அருகே மேலும் ஒரு யானை பலி.. மயக்க மருந்து செலுத்தியதால் விபரீதம்!
கோவை: கோவை மாவட்டம் தமிழக, கேரள எல்லையில் 20 வயது யானை ஒன்று உயிரிழந்தது. முன்னதாக காயம் அடைந்த அந்த யானைக்கு கேரள வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர்.
சமீபத்தில் ரயிலில் அடிபட்டு பெண் யானை ஒன்று இறந்தது. மேலும் ஊருக்குள் சுற்றித் திரிந்த மகராஜ் ஆண் யானை வனத்துறையினர் பிடித்தனர். ஆனால் அந்த யானையும் இறந்தது. இந்நிலையில், மற்றொரு யானை இறந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்து பில்லூர் அணை அமைந்துள்ளது. தமிழக கேரள எல்லைப்பகுதியான எழுத்துக்கல்புதூர் வனப்பகுதியில் வெள்ளிக் கிழமை இரவு 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு இறந்து கிடந்தது. யானை இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புவரை கேரள மாநிலம் அட்டபாடி வனப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக யானையின் காலில் காயம் இருப்பது கேரள வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கேரள வனத்துறையினர், மருத்துவக்குழுவுடன் இணைந்து யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி, அதற்கு சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளியும் மருந்தும் யானைக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த யனை கேரள, தமிழக எல்லையான எழுத்துக்கல்புதூர் பகுதியில் வெள்ளிக் கிழமை இரவு இறந்து கிடந்தது தெரியவந்தது. கூடுதலான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் யானை இறந்ததா? என வனவிலங்கு ஆர்வலர்கள் சந்தேகின்றனர்.
இத்தகவல் அறிந்து வந்த கேரள மற்றும் தமிழ்நாடு வனத் துறையினர், இரு மாநில கால்நடை மருத்துவர்களைக் கொண்டு யானையின் உடலை தனித்தனியே பிரேதப் பரிசோதனை செய்தனர். உடல்நலக் கோளாறு காரணமாக யானை இறந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications