விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி.. அமைச்சர் அறிவிப்பு!!
விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட புதிய வழி-திண்டுக்கல் சீனிவாசன்- வீடியோ
நெல்லை: விளை நிலங்களுக்குள் புகும் யானைகளை விரட்ட தேனீக்கள் மூலம் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பொருனைப் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் யானைகளை தடுக்கும் வகையில் தேனீக்கள் கூடுகள் மூலம் வேலி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் வேட்டைத்தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications