For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலை விற்கும் சாரதி.. கதறி அழுத பிரசன்னா.. கருணாநிதிக்காக உணர்ச்சிகரமாக காத்திருக்கும் தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் திமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதிக்காக உணர்ச்சிகரமாக காத்திருக்கும் தொண்டர்கள்- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் திமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறார்கள். காவிரி மருத்துவமனைக்கு வெளியிலும், கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியிலும் நிறைய உணர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது.

    அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை நேற்று இரவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

    கண்ணீர் விட்ட பிரசன்னா

    திமுக தலைவர் கருணாநிதியை தன்னுடைய குருவாக கருதும் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா நேற்று இரவு முழுக்க காவிரி மருத்துவமனையிலேயே இருந்தார். அவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகி இருக்கிறது. கருணாநிதியை ஐசியூவில் சேர்த்ததும் அவர் கண்ணீர்விட்டு அழுதார்.

    கடலை விற்கும் சாரதி

    திமுக கட்சியின் தொண்டராக சிறுவயதில் இருந்து உழைப்பவர் சாரதி. சென்னையில் அறிவாலயத்திற்கு சென்று இருக்கும் திமுக தொண்டர்கள், கட்சியினருக்கு, அவரை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. திமுக அலுவலகம் முன்புதான் அவர் கடலை விற்பார். நேற்று மருத்துவமனையில் கருணாநிதியை சந்திக்க அவர் நேரடியாக வந்திருக்கிறார்.

    85 வயது பாட்டி

    திருக்குவளையில் இருந்து 85 வயது ரத்தினாம்பாள் கருணாநிதியை சந்திக்க நேற்று கோபாலபுரம் வந்திருக்கிறார்.

    கண்ணீர் விடும் காட்சி

    கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன் தொண்டர்கள் கண்ணீர்விடும் காட்சி.

    English summary
    DMK members, politicians gathered in front of Cauvery Hospital as Karunanidhi admitted in ICU.Emotional DMK members praying for Karunanidhi's health.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X