குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிடுவோம்- ஜெயலலிதா
சென்னை: குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் கிடைக்கச் செய்து, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் "குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
அனைவரின் கடமை
குழந்தைப் பருவமானது துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் இனிய பருவமாகும். இக்குழந்தைப் பருவத்தில், குழந்தைத் தொழிலாளர் என்ற கொடுமைக்கு ஆட்படுத்தப்படும் எந்த ஒரு குழந்தையையும் விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத்தினையும், முறையான கல்வியினையும் வழங்கிட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
குழந்தை தொழிலாளர்கள் மீட்டெடுப்பு
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக ஒழித்திடும் வகையில், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளித்தல், குழந்தைகள் தரமான கல்வி கற்றிடவும், பெற்றோர்களின் சுமைகளைக் குறைத்திடவும், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, சீருடைகள், சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், மடிக்கணினிகள் என எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் போன்ற திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு கடந்த ஐந்து ஆண்டுகளாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் இல்லா தமிழகம்
குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெறப்படும் வருமானம் வீட்டிற்கும், நாட்டிற்கும் சிறுமை என்பதை உணர்ந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி அழிவில்லா கல்விச் செல்வம் அவர்களுக்கு கிடைக்கச் செய்திடுவோம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications