புளிய மரத்தில் கார் மோதி விபத்து– பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாப பலி
கோவை: கோவையில் கார் ஒன்று புளிய மரத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அக்காரில் பயணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள குரும்பபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது.
இந்தக் கல்லூரியில் நீலகிரி மாவட்டம், வண்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த செல் வராஜின் மகன் நந்தகுமார், மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த குமரே சனின் மகன் அருண்ராஜ் ஆகிய இருவரும் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்களின் நண்பரான கிஷோர் என்பவர் சென்னையிருந்து கார் மூலம் கடந்த நான்கு நாள்களுக்கு முன் குரும்பபாளையத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நந்தகுமார், அருண்ராஜ் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, கிஷோரின் காரை எடுத்துக் கொண்டு கோவைக்கு சென்றனர்.
அந்தக் கார், குரும்பபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நந்தகுமார், அருண்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் நந்தகுமார், அருண்ராஜ் ஆகியோரின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications