ஆங்கிலத்திலும் அசத்தலாம்...காரைக்குடி பள்ளி மாணவர்களுக்கு மொழித் தொடர்பு திறன் பயிற்சி
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கில மொழி தொடர்பு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்குடி: இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரியாக பேசுவதன் முக்கியத்துவம் மற்றும் உச்சரிப்புகள் கற்று கொடுக்கப்பட்டது. மாணவர்களின் கூச்ச சுபாவத்திற்கான காரணம் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது குறித்து விளக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி உமையாள் இராமநாதன் கல்லூரி, முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பாக "ஆங்கில மொழி தொடர்பு திறன்" என்ற தலைப்பில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 30.11.17 முதல் 06.12.17 வரை 5 நாட்கள் மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியினை பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஆ. பீட்டர்ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி
ஆங்கில துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவிகள் ராஜலெட்சுமி, பிரித்தி பிரியா, சுகன்யா,கற்பகம் மற்றும் இளையபொன்னி ஆகிய 5 மாணவிகள் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பினை ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அளித்தனர்.

எளிதாக பேச பயிற்சி
இப்பயிற்சியில் ஆங்கிலத்தில் சரியாக பேசுவதன் முக்கியத்துவம் மற்றும் உச்சரிப்புகள் கற்று கொடுக்கப்பட்டது. மாணவர்களின் கூச்ச சுபாவத்திற்கான காரணம் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது குறித்து விளக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் பேச பயிற்சி
Thesarus பயன்படுத்தும் முறை, நா நெகிழ்வு (டங் டிவிஸ்டர்) வார்த்தை விளையாட்டு போன்றவை நடத்தப்பட்டன. டிசம்பர் 6ஆம் தேதியன்று பயிற்சி நிறைவடைந்தது. இப்பயிற்சியின் நிறைவு விழாவிற்கு உமையாள் இராமநாதன் கல்லூரி முதல்வர் ஆங்கிலத் துறைத் தலைவர் திருமதி என். அழகுமீனாள் அவர்கள் தலைமையேற்றிருந்தார்.

மாணவர்கள் மகிழ்ச்சி
இப்பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி. கீதா சுந்தரேஸ்வரி மற்றும் விஜயகாந்தி அவர்கள் செய்திருந்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications