எண்ணூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தம் !
எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதையொட்டி மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எண்ணூர் அனல் மின்நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூரில் தமிழ்நாடு மின் வாரியத்தின் அனல் மின் நிலையம் உள்ளது. இது துவங்கி 47 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் மின் உற்பத்தியின்போது, அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதையடுத்து அந்த மின் நிலையத்தில் 2017 மார்ச் மாதத்துடன் நிரந்தரமாக மூடப்பட உள்ளது.

இந்த நிலையில் எண்ணூர் அனல் மின்நிலையம் மூடப்படுவதையொட்டி நேற்று இரவு 9 மணியோடு முதல் மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. மொத்தம் உள்ள 5 பிரிவுகள் மூலம் 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து எண்ணுார் மாற்று என்ற பெயரில், 660மெகாவாட் திறன் உடைய புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications