தினகரன் கெடு... அதிமுக அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அவசர ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அணிகளை இணைப்பதற்கு டிடிவி தினகரன் கொடுத்த கெடு நெருங்கி வரும் நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்த அதிமுக இப்போது 3 அணியாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். ஜாமீனில் வெளிவந்த அவர், அணிகளை இணைக்க 2 மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அணிகளை இணைக்க தினகரன் கொடுத்த கெடு முடிவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து டிடிவி தினகரன் கட்சிப்பணியாற்றப்போவதாக கூறியுள்ளார். அணிகள் இணைப்பு சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் அணிகள் இணைப்பு பற்றியும் டிடிவி தினகரன் அரசியல் பேச்சு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியுள்ள நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications