ஈபிஎஸ் பதவி காலியாக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்தேன்.. ஸ்டாலின் சொன்ன கதை!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்ததாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது நிர்வாகத் திறமையில்லாத காரணத்தினால்தான், எடப்பாடி அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பல கோடி ஊழல்
மேலும் இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த ஸ்டாலின் அதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆட்சிகவிழ்ப்புக்கு துணை போகாது
குறுக்குவழியில் சென்று கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க தி.மு.க என்றும் நினைத்ததில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்கவிழ்ப்புக்கு துணை போனதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒரு நிமிடத்தில்
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்திருந்தால், ஒரு நிமிடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த ஆட்சி எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்வதற்காக மாதம் தோறும் அவர்களுக்கு படி அளக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நல்லது செய்ய முடியாது
ஒரு வாரத்திற்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை நடத்த முடியாது. அப்படி செய்தால் நல்ல ஆட்சியை தர முடியாது என்றும் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்றும் ஸ்டாலின் கூறினார்.

ஓபிஎஸ் பதவி பறிபோனது
கட்டண உயர்வை அதிகப்படுத்தாமல் நிர்வாகத்தை நடத்துவது என்பதுகுறித்த ஆய்வறிக்கையை நேற்று எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்ததை கூறிய ஸ்டாலின், ஓபிஎஸ் முதலமைச்சராக இருக்கும்போது, அவருடன் அமர்ந்து டீ குடித்தேன். அவரது முதல்வர் பதவி பறிபோனது.

பதவி பறிபோக வேண்டும்
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் காத்திருந்து டீ குடித்தேன். அவரது பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்தேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications