ஈபிஎஸ்-ஓபிஎஸ் நாளை டெல்லி பயணம்.. சசிகலா நியமனம் தொடர்பான பிரமாண பத்திரங்கள் வாபஸ்?
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பான பிரமாணப் பத்திரங்களை திரும்ப பெற முதல்வரும், துணை முதல்வரும் நாளை டெல்லிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சசிகலா நியமனம் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகளும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை திரும்ப பெற முதல்வரும், துணை முதல்வரும் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பும், ஆதரவு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
Recommended Video


அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து விட்ட நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றுள் முக்கியமானது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பாக இரு அணிகளும் தாக்கல் செய்த பிரணாப பத்திரங்களை வாபஸ் பெறுவது என்பதாகும். அதன்படி அந்த பத்திரத்தை திரும்ப பெற முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சிவி சண்முகம், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர்.
அப்போது தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுவது என்றும் அதிமுக சார்பில் செயற்குழுவும், பொதுக் குழுவும் கூட்டுவது குறித்தும் விளக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுவதற்காக எம்எல்ஏ-க்கள், எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று விட்டனர் என்று கூறப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications