For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆலோசனை!

இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்ட நிலையில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு கிடைத்துவிட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இரட்டை இலை சின்னம் 8 மாதங்களாக முடக்கப்பட்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இன்று மதுசூதனன் தலைமையிலான செம்மலை, ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோர் அடங்கிய அணிக்கே இரட்டை இலை சின்னம் என தீர்ப்பளித்துவிட்டது தேர்தல் ஆணையம்.

    EPS and OPS to hold discuss on new developments

    இதனால் சசிகலா தலைமையிலான போட்டி அணி அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் எடப்பாடி ஓபிஎஸ் அணிக்கு தாவவும் தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர். அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இருவரும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.,

    பின்னர் எடப்பாடி- ஓபிஎஸ் இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிக்கையை அமைச்ச ஜெயக்குமார் வாசித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

    English summary
    TamilNadu Chief Minister Edappadi Palanisamy and O Panneerselvam held discuss over the changes in the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X