அதிமுக மட்டும்தான் 2 முறை பிரிந்து மீண்டும் இணைந்த ஒரே கட்சி.. முதல்வர் பெருமிதம்
பிரிவால் ஆதாயம் தேடியோருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளோம் என்று இரு அணிகள் இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: இரண்டு முறை உடைந்து பின் இணைந்த ஒரே கட்சி அதிமுகதான் என்று இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் ஏற்பட்டன. நீண்ட இழுபறி பேச்சுக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒருவழியாக இன்று பல்வேறு சின்ன சின்ன தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து 2 அணிகளும் இணைந்தன.

தொண்டர்களின் எண்ணப்படி இணைப்பு
பின்னர், இணைப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது: இந்தக் கட்சி மீண்டும் இணையும் உயர்ந்த எண்ணத்தில் ஈடுபட்டோம். நாங்கள் உறுதியாக இருந்ததால் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. அனைத்துத் தொண்டர்களின் எண்ணத்தின் விருப்பத்தை ஏற்று நாங்கள் இணைந்துள்ளோம்.

இணைந்த வரலாறு கிடையாது
இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் எல்லாம் பிரிந்த பின்னர் இணைந்த வரலாறு கிடையாது. அதிமுக மட்டும்தான் மக்களோடு மக்களாக இருந்து, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பேசி தீர்த்து ஒற்றுமையை ஏற்படுத்தி கட்சியை வலுவாக்கியுள்ளோம்.

சம்மட்டி அடி
அதிமுகவில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்திக் கொண்டு இடையில் புகுந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடி கொடுத்துள்ளோம். எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற ஒன்றிணைந்துள்ளோம்.
Recommended Video


சூளுரை
இன்று முதல் எந்தச் சூழ்நிலையிலும், கருத்து வேறுபாடு வந்தாலும், இணைந்து செயல்படுவோம். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications