For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிடிவி தினகரன் கெடு எதிரொலி... அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனைக் கூட்டம் - வீடியோ

அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் இன்று மலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை கழகத்தில் இன்று மாலை நடக்கிறது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என டிடிவி தினகரன் விதித்த 60 நாள் கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும், ஆகஸ்டு 5ஆம் தேதி அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தலைமை கழகத்துக்கு வர வேண்டும் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended Video

    ADMK Ministers and MLA's Meeting-Oneindia Tamil

    ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக்கொள்கிறேன் என்று கூறிய தினகரன் தற்போது தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகக் கூறியதும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களுலும் அமைச்சர்களுக்கும் நடுக்கம் உண்டாகியது. மேலும், இத்தனை நாட்கள் பிரிந்திருந்த தாய்மாமன் திவாகரன் உடன் தினகரன் கைகோர்த்தது பெரும் அச்சத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஏற்படுத்தியுள்ளது.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இன்று அவசரம் அவசரமாக தலைமை கழக அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட வேண்டும் என எடப்பாடியார் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அணி இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அமைச்சரவையிலும் கட்சி பதவிகளிமும் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    CM Edapadi Palanisamy in Admk office important and urgent meeting will be held regarding joining of 2 factions of Admk.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X