ஒன்னுமே செய்யாதவருக்கு மறுபடியும் சீட்டா?... மாற்றப்பட்ட ஈரோடு வேட்பாளரால் அதிர்ச்சியில் அதிமுக!
ஈரோடு: ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேட்பாளரருக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.
அதிமுக வேட்பாளர் மாற்றத்தில் ஈரோடு மேற்கு தொகுதியும் இடம் பெற்றுள்ளது. இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் வரதராஜனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும், அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான கே.வி.ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் முத்துசாமி. முத்துசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. முத்துச்சாமிக்கு நிகரான வேட்பாளர் வரதராஜன் இல்லை என கட்சித் தலைமைக்கு பல்வேறு புகார் மனுக்களை அனுப்பினார்கள் ஈரோடு மேற்கு தொகுதி அதிமுகவினர்.
இந்த நிலையில்தான் கே.வி.ராமலிங்கம் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது தொகுதியின் எம்எல்ஏவான இவருக்கு தொகுதி முழுவதும் கடும் அதிருப்தி நிலவுகிறது. தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கான அடிப்படை தேவைகள் எதையும் செய்யவில்லை என்றும், ராமலிங்கம் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே இங்கு இறக்குமதி செய்யப்பட்ட இவரையே மீண்டும் வேட்பாளராக அறிவித்திருப்பதால் முதலில் அறிவிக்கப்பட்ட வரதராஜனைவிட கட்சியின் வெற்றி வாய்ப்பு பின்வாங்கி சென்றுவிட்டதாக சொல்கிறார்ள்.
இத்தொகுதியில் உள்ள மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் தங்களை வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.
திமுக வட்டாரமும் உள்ளுரில் உள்ளவர்களை விட்டுவிட்டு வெளியூரைச் சேர்ந்த கே.வி.ராமலிங்கத்தை அறிவித்திருப்பதும் எதிர்தரப்பில் உள்ள திமுகவில் உள்ள முத்துசாமிக்குத்தான் சாதகம் என கட்சித் தலைமைக்கு புகார் அனுப்புகிறார்கள். திமுக வேட்பாளர் முத்துசாமிக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்த முடியாமல் இருப்பதால், மீண்டும் வேட்பாளர் மாற்றம் வருமா என்ற பரபரப்பு ஈரோடு மேற்கு தொகுதியில் நிலவுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications