சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட சுமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் நோட்டோ (யாருக்கும் வாக்கு இல்லை)வுக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்
Feb 08, 2025, 6:14 pm IST
முதலமைச்சரின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி - அமைச்சர் முத்துசாமி
“முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த மக்கள் ஆதரவுதான் ஈரோட்டில் கிடைத்துள்ள இந்த வெற்றி. முதல்வர் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள், மகளிருக்கான திட்டங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Feb 08, 2025, 5:03 pm IST
முதல்வருக்கு சமர்ப்பணம் - திமுக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வெற்றியை முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன். எவ்வளவு அவதூறு கருத்துகளை பரப்பினாலும் இறுதியில் திமுகவே வென்றுள்ளது - வி.சி.சந்திரகுமார்.
Feb 08, 2025, 4:52 pm IST
1,14,439 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Feb 08, 2025, 4:52 pm IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது நாதக. திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
Feb 08, 2025, 4:35 pm IST
1,08,305 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 22,992 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்தங்கியுள்ளார்.
Feb 08, 2025, 4:18 pm IST
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 21,802 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்தங்கியுள்ளார்.
Feb 08, 2025, 4:18 pm IST
1,02,544 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
Feb 08, 2025, 4:15 pm IST
1,02,544 வாக்குகள் பெற்ற திமுக
திமுக விசி சந்திரகுமார் 1,02,544; நாதக சீதாலட்சுமி 21,802
வாக்கு வித்தியாசம் 80,742
Feb 08, 2025, 4:07 pm IST
25,777 வாக்குகள் பெற்றால் டெபாசிட்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 25,777 வாக்குகள் பெற்றால் டெபாசிட்டை தக்க வைக்க முடியும்; எஞ்சிய 4 சுற்றுகளில் இந்த வாக்குகளைப் பெற்றுவிடுவாரா? இல்லையா? என போராட்டத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி
Feb 08, 2025, 4:02 pm IST
96,450 வாக்குகள் வித்தியாசம்
திமுக விசி சந்திரகுமார் 96,450; நாதக சீதாலட்சுமி-20,384 வாக்குகள் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை தக்க வைக்க போராடுகிறது
Feb 08, 2025, 3:42 pm IST
70,853 வாக்குகள் வித்தியாசம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், 2-வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியை விட 70,853 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
Feb 08, 2025, 3:41 pm IST
89,931 வாக்குகளுடன் திமுக முன்னிலை
திமுகவின் விசி சந்திரகுமார் 89,931 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்; நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி 19,078 வாக்குகள் பெற்றுள்ளார்.
Feb 08, 2025, 3:22 pm IST
83,191 வாக்குகள்
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 83,191 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுகவின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
Feb 08, 2025, 3:07 pm IST
2026 தேர்தலுக்கான அச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது 2026 தேர்தலுக்கான அச்சாரமாகும்- விசி சந்திரகுமார்
Feb 08, 2025, 2:58 pm IST
76, 278 வாக்குகள்
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 76, 278 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 16,547 வாக்குகள் பெற்றுள்ளார். 3-வது இடமாக நோட்டாவுக்கு 3950 வாக்குகள் கிடைத்துள்ளன.
Feb 08, 2025, 2:47 pm IST
அதிகமான வாக்குகள்தான் எங்களுக்கு- நாம் தமிழர்
கடந்த தேர்தல்களை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதால் இது எங்களுக்கு வெற்றி- வேட்பாளர் சீதாலட்சுமி
Feb 08, 2025, 2:39 pm IST
54,715 வாக்குகள் வித்தியாசம்
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 69,728 வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 15,008 வாக்குகளைப் பெற்றுள்ளார். 54,715 வாக்குகள் வித்தியாச்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
Feb 08, 2025, 1:22 pm IST
43,888 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 55,910 ; நாதக வேட்பாளர் சிதாலட்சுமி 12,022 வாக்குகள் பெற்றுள்ளனர். 43,888 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது.
Feb 08, 2025, 1:07 pm IST
பெரியார் வாழ்க- திமுக முழக்கம்
ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் தந்தை பெரியார் வாழ்க என முழக்கமிட்டு பட்டாசுகள் வெடித்தனர் திமுகவினர்
Feb 08, 2025, 12:50 pm IST
38,725 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 49,312; நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 10,587 வாக்குஅள் பெற்றுள்ளன்ர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 38,725 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
Feb 08, 2025, 12:35 pm IST
72-வது வாக்குச் சாவடியில் 8 ஓட்டு வாங்கிய நாதக
ஈரோடு கிழக்கு பெரியவலசு வாக்குச் சாவடியில் வெறும் 8 வாக்குகளை மட்டுமே நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பெற்றுள்ளார்.
Feb 08, 2025, 12:28 pm IST
34,330 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு: திமுக சந்திரகுமார் 43,488 வாக்குகளுடன் வெற்றி முகம்
நாதக சீதாலட்சுமி 9,152 வாக்குகளுடன் தோல்வி முகம்; 34,330 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர் முன்னிலை
Feb 08, 2025, 11:48 am IST
29,333 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக விசி சந்திரகுமார் 37,001; நாதக சீதாலட்சுமி 7,668 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 29,333
Feb 08, 2025, 11:37 am IST
திமுகவினர் கொண்டாட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெறுவது உறுதியான நிலையில் அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்
Feb 08, 2025, 11:34 am IST
திமுக அமோக முன்னிலை
திமுக 30,657; நாதக 5,954 வாக்குகள்; வாக்கு வித்தியாசம் 24,703 ஓட்டுகள்
Feb 08, 2025, 10:53 am IST
தபால் வாக்குகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி
தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகள் கிடைத்தன; நோட்டாவுக்கு 18-ம் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் கிடைத்தன.
Feb 08, 2025, 10:42 am IST
18,712 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 22,682 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 3970 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 18,712 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது
ஈரோட்டில் 2,278 வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு போட்டியாக நோட்டாவுக்கு 578 வாக்குகள் கிடைத்துள்ளன.
Feb 08, 2025, 9:58 am IST
நோட்டாவுக்கு 517
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 517 வாக்குகள் கிடைத்துள்ளன
READ MORE
10:17 PM, 7 Feb
அதிமுக புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்தது. இதேபோல அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக, பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
10:18 PM, 7 Feb
4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்
2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் திருமகன் ஈவெரா வென்று எம்.எல்.ஏ.வானார். அவர் காலமானதைத் தொடர்ந்து 2023-ல் இடைத்தேர்தல்
நடைபெற்றது. அதில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மறைந்ததால் 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு எதிர்கொண்டது
5:44 AM, 8 Feb
72,889 பேர் வாக்களிக்கவில்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 1,54,657 வாக்களித்தனர்; 72,889 பேர் வாக்களிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 67.97% வாக்குகள் பதிவாகி இருந்தன.
5:44 AM, 8 Feb
வாக்கு எண்ணிக்கை எங்கு?
ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளின் 246 தபால் வாக்குகளும் முதலில் எண்ணப்படும். இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 78 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
5:44 AM, 8 Feb
14 மேஜைகள் 17 சுற்றுகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது 14 மேஜைகளில் 17 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 51 அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.
6:01 AM, 8 Feb
காலை 7.30 மணிக்கு தபால் வாக்கு அறை திறப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் இருப்பு அறை காலை 7.30 மணிக்கு திறக்கப்படும். இதன் பின்னர் 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
6:02 AM, 8 Feb
டெண்டர் ஓட்டுகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உரிய ஆவணங்கள் இருந்தும் தம்மால் வாக்கு செலுத்த முடியவில்லை என சில இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் 'டெண்டர்' ஓட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த டெண்டர் ஓட்டுகளும் எண்ணப்படும்.
6:13 AM, 8 Feb
600 போலீசார் பாதுகாப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிகை மையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
6:46 AM, 8 Feb
56 பேர் நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்காக 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்; 76 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
7:09 AM, 8 Feb
தேமுதிக,, அதிமுக, காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2011-ம் ஆண்டு முதலில் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் தேமுதிக வென்றது. 2016-ல் அதிமுக, 2021-ல் காங்கிரஸ், 2023 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது.
7:11 AM, 8 Feb
பாதுகாப்பு அறை திறக்கப்படுகிறது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை சற்று நேரத்தில் திறக்கப்பட உள்ளது.
7:34 AM, 8 Feb
2011-ல் தேமுதிக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வென்றது. தற்போது திமுக வேட்பாளராகப் போட்டியிடும் விசி சந்திரகுமார், 2011-ல் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு திமுகவை தோற்கடித்தார்.
7:48 AM, 8 Feb
பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
#WATCH | Erode, Tamil Nadu: Security tightened outside the counting centre ahead of the counting for the Erode (East) Assembly by-election pic.twitter.com/ZUd4MqfFIB
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
8:26 AM, 8 Feb
திமுக முன்னிலை
தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார்
8:36 AM, 8 Feb
திமுக 50; நாதக-1
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகளில் தற்போது வரை திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 50 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 1 வாக்கையும் பெற்றுள்ளார்.
8:37 AM, 8 Feb
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வாக்குகள் எண்ணும் பணி
தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது
8:48 AM, 8 Feb
தபால் வாக்குகளில் திமுக 935
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தபால் வாக்குகள் விவரம்: திமுக- 935; நாம் தமிழர் கட்சி 137
8:53 AM, 8 Feb
திமுக 5567 வாக்குகள்
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5568 வாக்குகளையும் நாதக சீதாலட்சுமி 489 வாக்குகளையும் பெற்றுள்ளார்
9:00 AM, 8 Feb
முதல் சுற்று முடிவுகள்
முதல் சுற்று முடிவு: திமுக விசி சந்திரகுமார் 8113 வாக்குகள்; நாதக சீதாலட்சுமி 1,013 வாக்குகள்
9:02 AM, 8 Feb
7100 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 7,100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்
9:16 AM, 8 Feb
திமுக அமோக முன்னிலை
திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை விட 10,050 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்
9:35 AM, 8 Feb
அதிமுக, பாஜக வாக்குகள்
ஈரோடு இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்தி வருகிறது.
9:39 AM, 8 Feb
13,694 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15,972; நாதக சீதாலட்சுமி 2,278 வாக்குகளைப் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் 13,694 வாக்குகள் வித்தியாசததில் முன்னிலை வகிக்கிறார்
9:58 AM, 8 Feb
நோட்டாவுக்கு 517
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 517 வாக்குகள் கிடைத்துள்ளன
10:15 AM, 8 Feb
நோட்டாவுடன் நாம் தமிழர் கட்சி போட்டி
ஈரோட்டில் 2,278 வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு போட்டியாக நோட்டாவுக்கு 578 வாக்குகள் கிடைத்துள்ளன.
Erode East Assembly Election 2025 Results (ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் ) LIVE News Updates in Tamil: Get Erode East By-Election 2025 vote counting results LIVE in Tamil. Stay updated on DMK vs NTK votes results. Follow real-time Erode East By election updates and highlights now at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.