For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோடு அருகே வினோத திருவிழா... ஆட்டு ரத்தத்தை குடித்து ஆவேசமடையும் பூசாரிகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செம்முனீஸ்வரர் ஆலயத்தில் வினோதமான திருவிழா நடைபெற்றது.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்டு ரத்தத்தை குடித்து ஆவேசமடையும் பூசாரிகள்-வீடியோ

    ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செம்முனீஸ்வரர் ஆலயத்தில் வினோதமான திருவிழா நடைபெற்றது. இதன் பெயர் குட்டி குடி என்பதாகும்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பூசாரியூரில் அமைந்துள்ளது செம்முனீஸ்வரர் திருக்கோயில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    Erode Kovil Festival

    அதன்படி கடந்த 16 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிகுடி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி சப்பரத்தில் சாமியை படியமர்த்தி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர்.

    இதனையடுத்து நீண்ட வரிசையில் கையில் ஆட்டுகுட்டிகளுடன் காத்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். அப்போது வெட்டிய ஆட்டுகுட்டிகளின் ரத்தத்தை குடித்தபடி பூசாரிகள் ஆக்ரோசமாக ஆடியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    Erode Kovil Festival

    மற்ற கோவில்களில் பெரிய ஆடுகளை மட்டும்தான் பலியிடுவது வழக்கம்.ஆனால் இந்த கோவில்களில் பிறந்த குட்டி முதல் 5 கிலோ எடை வரையிலான குட்டிகள் மட்டுமே பலியடயிடப்படுறது. விழா முடிந்த பின்னர் நேர்த்திகடனாக பலியிடப்பட்ட ஆயிரகணக்கான ஆட்டுகுட்டிகளும் சப்பரத்தை சுமந்தவர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு நேர்த்திகடன் செலுத்துவதால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும்,பில்லி சூன்ய பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பது செம்முனீஸ்வரர் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    English summary
    A different function conducted every year in Erode Semmunueeswarar temple. They priest of temple drink Goat's blood and dances vigorously.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X