ஈரோட்டில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: தாய்-மகனை தாக்கி நகை, பணம் கொள்ளை
தாய், மகனை தாக்கிய மர்மகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
ஈரோடு: ஈரோட்டில் தாயையும் மகனையும் தாக்கியதோடு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மகும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
ஈரோடு அருகேயுள்ள ஓடைகாட்டு வலசை சேர்ந்தவர் தங்கம்மாள். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். விவசாயிகளான இவர்கள் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது, காரில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்பக்க கதவின் வழியாக உள்ளே நுழைந்துள்ளது.

அறிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த அக்கும்பல் தங்கம்மாளின் வாயில் துணியை வைத்து அழுத்தியது. மேலும் கோபாலகிருஷ்ணனை அரிவாளால் தாக்கியது.
இதனையடுத்து தாய், மகன் இருவர் அணிந்திருந்த நகைகள், மற்றும் பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து அந்த கும்பல் தப்பி சென்றது.
இதனையடுத்து தாய், மகன் இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ பகுதிக்கு வந்த அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் மர்ம கும்பல் ஒன்று நுழைந்து நகை பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதேபோல் அப்பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications