ஈரோட்டில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் பெண் உட்பட இருவர் கைது
சிறுமியை திருமணம் செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

ஈரோடு: சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எலக்ட்ரீசன் சீனிவாசலு. இவருக்கும் ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த ரேகாபானுவுக்கும் முகநூல் வாயிலாக நட்பு ஏற்பட்டது. அவரை சந்திப்பதற்காக ஈரோடு வந்த சீனிவாசலுவுக்கும் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 28 ம் தேதி சிறுமியை ஆந்திரா அழைத்து சென்ற சீனிவாசலு அங்கு அவரை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீனிவாசலு மற்றும் ரேகாபானு இருவரையும் ஈரோடு மகளிர் போலீசார் இன்று கைது செய்தனர்.

இவர்கள் மீது போஸ்கோ 2012 மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைகாவலுக்கு அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications