கருணாநிதியுடன் ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு சந்திப்பு - இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சு
சென்னை: சென்னை வந்துள்ள ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இந்தியாவுடனான ஐரோப்பிய நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்காக, ஓவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் தூதர் தலைமையிலான 10 நாடுகளின் பிரதிநிதிகள் சுற்றுப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சென்னை வந்துள்ள இவர்கள், வரும் 11ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தங்கள் சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக இக்குழுவினர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் பன்னாட்டு நீதி விசாரணை குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டிருப்பதைப் போல இந்தியாவிலும், அந்த தண்டனைக்கு தடை விதிக்க இந்த சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக இக்குழுவினர் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோரையும் சந்திப்பார்கள் எனத் தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications