ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெ. நேரில் அஞ்சலி!
சென்னை: சென்னையில் காலமான திராவிடர் இயக்க மூத்த தலைவர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த சுலோச்சனா, நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள வீட்டில் சுலோச்சனா சம்பத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
சுலோச்சனா சம்பத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, பொதுவாழ்வில் பெண்கள் பங்கு பெறுவதற்கும், சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிடவும் உழைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவு தமக்கும், அதிமுகவுக்கும் பேரிழப்பு என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications