பழம் பழுக்க வேண்டும்... நேரம் வர வேண்டும்.. கூட்டணி குறித்து ஈவிகேஎஸ் பேச்சு!
சென்னை: பத்திரிகையாளர்கள் எதிர்பார்ப்பது போல நடக்க வேண்டுமென்றால் நேரம் கூடி வர வேண்டும். பழம் பழுக்க வேண்டும். அதுவாக பழுக்க வேண்டும் என்று திமுகவுடனான கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவஞ்சலி கூட்டத்தில் திமுக ராஜ்யசபா எம்.பியும், கவிஞருமான கனிமொழி கலந்து கொண்டார்.
தேசிய முரசு வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

எதையோ எதிர்பார்த்து
நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில், ஜெயகாந்தன் நினைவஞ்சலி கூட்டத்தில் இளங்கோவன், கனிமொழி, கம்யூனிஸ்டு தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதால் ஏதோ எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் காலையிலேயே வந்து விட்டனர்.

நேரம் வர வேண்டும், பழம் பழுக்க வேண்டும்
அவர்களுக்கு செய்தி கொண்டு போக வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இங்கு குவிந்துள்ளனர். நீங்கள் எதிர்பார்க்கும் எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். பழம் பழுக்க வேண்டும். அதுவா பழுக்க வேண்டும்.

மணிமண்டபம் அமைப்போம்
ஜெயகாந்தனுக்கு அவருடைய பெயரை என்றென்றும் சொல்லிக்கொண்டு இருக்கும் வகையில் நினைவு மண்டபம், மணி மண்டபம் எதையாவது அனைத்துக் கட்சி சார்பில் செய்ய முயற்சி எடுப்பேன். இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்ற கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன் என்றார் அவர்.

அரசு மரியாதை கூட செலுத்தவில்லை
நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், ஜெயகாந்தன் மறைவுற்றதற்கு அரசு சார்பில் ஒரு மரியாதை கூட செலுத்தவில்லை. இது வேதனை அளிக்கிறது. கேரளாவில் இதுபோல் கிடையாது. உரிய மரியாதை கொடுக்கிறார்கள்.

பெண்களை மதித்தவர் ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் மனதில் பட்டதை தைரியமாக எழுதக்கூடியவர். பெண்களை மதிக்கக்கூடியவர். அந்த காலத்திலேயே துணிச்சலாக விமர்சனம் செய்து கதை எழுதியவர். அச்சம் என்பது அவருக்கு கிடையாது என்றார் அவர்.

யார் யார்?
கூட்டத்தில் சிபிஎம் எம்.பி. டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, செல்வ பெருந்தகை, விஜயதரணி எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications