ஜெ. கொடநாட்டில் இருந்தாலும் ஒன்றுதான்.. சென்னையில் இருந்தாலும் ஒன்றுதான்.. இளங்கோவன் தாக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தாலும் ஒன்றுதான், கொடநாட்டில் இருந்தாலும் ஒன்றுதான். ஏன் அமெரிக்காவில் இருந்தாலும் ஒன்றுதான். ஏன் என்றால் அவர் செயல்படுவதே இல்லையே. பிறகு எங்கிருந்தால் என்ன என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நடைபயணத்தை காங்கிரஸார் மேற்கொண்டனர்.
சென்னையில், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் திருவல்லிக்கேணி பகுதி 23 சர்க்கிள் சார்பில் இன்று காலை 10 அளவில் ராயப்பேட்டை வி.எம்.தெருவில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.

எங்கிருந்தால் என்ன
அப்போது செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தாலும் சரி, கொடநாட்டில் இருந்தாலும் சரி, அமெரி்க்காவில் இருந்தாலும் சரி. எல்லாம் ஒன்றுதான். ஏனென்றால் அவர் செயல்படாத முதல்வராக இருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. எதுவுமே நடக்கவில்லை. செயலற்ற அரசு அரசாண்டு கொண்டிருக்கிறது.

காவல்துறையில் அதிமுக குறுக்கீடு
காவல்துறையினர் தன்னிச்சையாக, பாரபட்சமின்றி செயல்பட முடியவில்லை. போலீஸ் இலாகாவில் அதிமுகவினரின் தலையீடு உள்ளது. எனவே அவர்களால் கடமையை செய்ய முடியவில்லை.

பூரண மதுவிலக்கை அமல் செய்க
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை அரசு செய்ய வேண்டும். மக்கள் மதுவின் கொடுமையை உணர்ந்து அதிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications