ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்... தலைவர்கள் அஞ்சலி
சென்னை: அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் இன்று காலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
சென்னை வேப்பேரியில் வசித்து வந்த சுலோச்சனா சம்பத், கடந்த சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். இதனால் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடவில்லை. 10 நாட்களாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இன்று காலை அவரது உடல் நிலை மோசமானது. காலை 6.30 மணி அளவில் அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

பெரியார் வீட்டு மருமகள்
சுலோச்சனா சம்பத்தின் கணவர் ஈ.வெ.கி. சம்பத் திராவிடர் இயக்க மூத்த தலைவர்களில் ஒருவர். தந்தை பெரியாரின் சகோதர் மகன். ஈ.வி.கே.சம்பத்-சுலோச்சனா சம்பத் திருமணம் 1946ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மதிவாணன், இனியன் சம்பத், கவுதமன் ஆகிய 4 மகன்களும், நாகம்மாள், அன்பு எழில் ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

அதிமுகவில் சுலோசனா சம்பத்
சம்பத் மறைவுக்கு பிறகு சுலோசனா சம்பத் அ.தி.மு.க.வில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம், குடிசை மாற்று வாரியம் உள்பட பல்வேறு முக்கிய அமைப்புகளில் தலைவராக இருந்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சுலோச்சனா சம்பத்தின் உடல் வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்தனர்.

பா.சிதம்பரம் அஞ்சலி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்காபாஷ்யம், சுமதி அன்பரசு உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், திருமதி சுலோசனா சம்பத் அவர்கள் தான் சார்ந்திருந்த அதிமுகவில் பல்வேறு பணிகளை திறம்பட ஆற்றியுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

வைகோ அஞ்சலி
சுலோச்சனா சம்பத் மறைவு குறித்து கேள்விப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த சுலோச்சனா சம்பத் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து வைகோ அஞ்சலி செலுத்தினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications