பொய் பேசிய "தோப்பு" மன்னிப்பு கேட்க வேண்டும்... ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று சட்டசபையில் பொய் பேசிய அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் பன்னாட்டு நிறுவுனமான கோகோ கோலா குளிர்பான தயாரிப்புக்காக ரூ.500 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கு தமிழக அரசு 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு கால குத்தகைக்கு ஏக்கர் 1 ரூபாய்க்கு தரை வார்த்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தோம். இந்த முடிவை எதிர்த்து அந்தப் பகுதியில் கடையடைப்புகள், ஊர்வலங்கள் என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
பவானி ஆற்றில் இருந்து தினசரி குளிர்பான உற்பத்திக்காக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும் என்ற ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தோம். இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அந்தப் பகுதியிலுள்ள 85 கிராமங்கள் பாலைவனமாக மாறும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
இந்நிலையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், 'பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை' என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பதில் கூறியிருந்தார்.
இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக கோகோ கோலா நிறுவனத்திற்கும், சிப்காட் தொழில் வளாக அதிகாரிக்கும் 15 மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல்களை பகிரங்கமாக ஊடகத்துறையினருக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக வழங்கினோம்.
அதற்குப் பிறகுதான் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு மேற்படி ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக இப்போது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியாளர்களும், கோகோ கோலா நிறுவனமும் சேர்ந்து ஊழல் சதியில் ஈடுபட்டு லஞ்ச வேட்டை நடத்த முற்பட்டதை விழிப்புணர்வோடு ஆதாரங்களை வெளியிட்ட காரணத்தினால் தான் இன்றைக்கு ஒப்பந்த்தம் ரத்து செய்யப்பட்டு, பெருந்துறை பகுதி மக்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் தவறான தகவல் வழங்கி, எல்லோரையும் ஏமாற்ற நினைத்த தமிழக அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications