நக்மாவுக்கு "பாட்ஷா"வை தெரியும்... ஜல்லிக்கட்டு பற்றி என்ன தெரியும்?.. இளங்கோவன் பாய்ச்சல்
சென்னை: தமிழர்களின் பாரம்பரியம் குறித்தோ, கலாச்சார விளையாட்டுகள் குறித்தோ, ஜல்லிக்கட்டு குறித்தோ நடிகை நக்மாவுக்கு என்ன தெரியும். அவருக்கு பாட்ஷா படம் மட்டும்தான் தெரியும் என்று காட்டமாக கூறியுள்ளார் தமிழ காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஜல்லிக்கட்டை வைத்து அரசியல்வாதிகள் விளையாடி வருகிறார்கள். அங்கு ஜல்லிக்கட்டை உயிராக நேசிக்கும் மக்கள் அழுது கொண்டுள்ளனர், உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்துப் புழுங்கிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் அரசியல்வாதிகள் இதை வைத்து பொழுது போக்கிக் கொண்டுள்ளனர்.
நடிகை நக்மாவெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அளழுக்கு தமிழர்களின் நிலை கேலவமாக விட்டது. இதைத் தட்டிக் கேட்கக் கூட ஆள் இல்லை. நக்மா பேட்டி கொடுத்து இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் அவரது கட்சியின் தலைவரான இளங்கோவன் கண்டனம் தெரிவிக்கிறார்.

நக்மாவின் ஜல்லிக்கட்டு
கடந்த வாரம் மகளிர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நக்மா ஜல்லிக்கட்டு நடத்துவதில் தனக்கு உடன்பாடு இல்லை. மாடுகளை வதைப்பதற்கு சமம் என்று கருத்து தெரிவித்தார்.

கண்டிக்க ஆள் இல்லை
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ யாருமே நக்மாவைக் கண்டித்துப் பேசக் கூட இல்லை.

லேட்டாக வாய் திறந்த இளங்கோவன்
இந்த நிலையில் தற்போதுதான் இளங்கோவன் இதுகுறித்து வாய் திறந்துள்ளார். அவர் கூறுகையில், நக்மாவுக்கு பாட்ஷாவை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டை தெரியவில்லை என்றார்.

மன்மோகனையும் கண்டிக்கலாமே!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட கடுமையாக ஜல்லிக்கட்டை எதிர்த்து வருகிறார். அதற்கு இளங்கோவன் இதுவரை கண்டனம் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications