ஜெ.வுக்காக எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால்..: இன்னும் விஜயகாந்தை எதிர்பார்க்கும் ஈவிகேஎஸ்
சென்னை: ஜெயலலிதாவை எதிர்க்க, தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடு திரும்பியுள்ளார். அவர் சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருக்கு கட்சி பெண்கள் ஆரத்தி எடுத்து பூசனிக்காய் உடைத்தனர்.
கட்சியினரை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

அமைச்சர்கள்
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. 3,4 அமைச்சர்களை வீட்டுக் காவலில் இருக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது போன்ற செய்திகள் கடந்த 2 நாட்களாக வெளியாகி வருகிறது. இது குறித்து ஜெயலலிதா தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

திமுக கூட்டணி
காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. இதனை திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் 2,3 நாட்களில் பேச்சுவார்த்தை துவங்கப்படும். பேச்சுவார்த்தை நடத்தும் குழு உறுப்பினர்கள் யார், யார் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும்.

தேமுதிக
கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவை அழைத்தோம். ஆனால் அவர் வராததால் விட்டுவிட்டோம். அதே சமயம் ஜெயலலிதாவை எதிர்க்க, தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.

ஜெயலலிதா
ஜெயலலிதாவை தோற்கடிக்கத் தேவைப்படும் பலம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ளது. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி ஆகும். வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைப்போம். முடிந்தால் சிறைக்கு அனுப்பி வைப்போம்.

மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணி வலுவாக உள்ளது என்று அதன் தலைவர்கள் தெரிவிப்பது காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போன்றது. வைகோ பேசுவது எதுவும் இதுவரை நடந்ததாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே இடம் இல்லை. கடந்த 30 ஆண்டுகளில் அவர் பேசுவதற்கு எதிராகத் தான் நடந்துள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications