காங்கிரஸ் தலைவராக ராகுல் விரைவில் பொறுப்பேற்றால் கட்சிக்கு நல்லது...சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.!
கோவை: ராகுல்காந்தி விரைவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது: தமிழக தேர்தல் ஆணையத்தை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. ஜி.எஸ்.டி மசோதவில் உள்ள சரத்துகளை பொறுத்து அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். தற்போது 570 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுகவுக்கும், பாஜகவும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை பிரதமருக்கு கடிதங்களை தபால் மூலம் அனுப்பி வந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது தபால்களை நேரடியாக கொடுக்க உள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும், ராகுல்காந்தி விரைவில் தலைவராக பதவியேற்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது எனவும் இளங்கோவன் கூறினார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என அந்த கட்சியில் சிலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சில மூத்த தலைவர்கள் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவராக விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என இளங்கோவன் கூறியுள்ளார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications