EVM வாக்கு இயந்திரத்தை உடைத்த பூத் ஏஜெண்ட்.. 208 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அதிர்ச்சி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட 193வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்குச்சாவடி முகவர் உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆங்காங்கே சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மற்ற இடங்களில் வாக்குப்பதிவு வேகமாக நடந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற வந்த நிலையில் திடீரென, வாக்குச்சாவடிக்குள் இருந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் பூத் ஏஜெண்ட் ஒருவர் வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியவரை போலீசர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் 208 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனால் இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கீழ்பாலூர் வாக்குச்சாவடிக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கலசப்பாக்கம் தொகுதியில் கடந்த 2021-ல் திமுகவின் சரவணன் வெற்றி பெற்றார். இந்த முறையும் அவரே களம் காண்கிறார். இவரது தந்தை பெ.சு. திருவேங்கடம், 1977, 1980, 1989, 1996-ல் திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர். இங்கே அதிமுக வேட்பாளராக நிற்பவர் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தி. இதே தொகுதியில 2006, 2011-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. தவெக சார்பில் ஏழுமலை, நாதக சார்பில் கீதா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 37.576% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது 2 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில் கடந்த 2021 தேர்தலை காட்டிலும் இது 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications