For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படியும் கிளம்புதப்பா வதந்தி... 2 கட்சி 4 மாஜிக்களின் ரகசிய திருவிளையாடலாம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் அவரது உடல்நலம் பற்றிமட்டுமல்ல அதிமுகவின் எதிர்காலம் குறித்தும் ஏகப்பட்ட வதந்திகள் காட்டுத் தீயாக பரவிக் கொண்டுள்ளன. இதில் எது உண்மை, எது பொய் என்றே தெரியவில்லை.

அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தொடங்கி வைத்த திருவிளையாடல் முடியாமல் நீள்கிறது... பொறுப்பு முதல்வரை நியமிக்க மத்திய அரசு நெருக்கடி கொடுக்க தொடங்கியபோது அதிமுகவை கபளீகரம் செய்ய பார்க்கிறது பாஜக என பேசப்பட்டது.

இதனைத் தடுக்கத்தான் ராகுல் காந்தி திடீரென புறப்பட்டு சென்னை வந்தார். ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு என கூறினார்.. காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பனோ வெளிப்படையாகவே அதிமுக அரசை நிலைகுலையச் செய்ய முயற்சிக்கிறது பாஜக என்று சாடினார்.

அதிமுகவை உடைக்க முயற்சி

அதிமுகவை உடைக்க முயற்சி

இதனிடையே திமுகவும் பாஜகவும் அதிமுகவை உடைக்க முயற்சிப்பதாகவும் அதிமுக எம்.எல்..ஏக்களுடன் பேரம் பேசுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.. தமிழக அரசியலில் இப்படியான கட்சி தாவல்கள், கட்சி உடைப்புகள் எல்லாம் சகஜம் என்பதால் எதையும் நிராகரிக்க முடியாத நிலைதான்...

களமிறங்கிய மாஜிக்கள்

களமிறங்கிய மாஜிக்கள்

தற்போது அதிமுக மாஜி அமைச்சர்கள் 2 பேரிடம் மாற்று கட்சி மாஜி அமைச்சர்கள் 2 பேர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக வதந்தி பரவி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவின் 2 மாஜிக்களுமே போயஸ் கார்டனால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். இதற்கு காரணமே நீண்டகாலமாக பரம எதிரி கட்சியின் மாஜிக்களுடன் தொழில் கூட்டணி வைத்ததுதானாம்....

கைகோர்த்த அதிமுக மாஜிக்கள்

கைகோர்த்த அதிமுக மாஜிக்கள்

இந்த மாஜிக்களில் ஒருவருக்கு முதல்வர் கனவெல்லாம் இருந்தது... இதே கதைதான் மற்றொரு மாஜிக்கும்... அப்படி ஒரு செல்வாக்கின் உச்சத்தின் இருந்தவர்தான் அவரும்... பரம எதிரி கட்சி மாஜியுடன் இணைந்து தொழில் கூட்டணி வைக்கப் போய் அவரும் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

உண்மையா?

உண்மையா?

தற்போது இந்த 4 மாஜிக்களின் ரகசிய பேச்சுகளை உளவுத்துறை ரொம்பவே உன்னிப்பாக கவனிக்கிறதாம்.. இந்த 4 பேரும் பேசுவதாக வரும் செய்திகளில் உண்மையிருந்தால் தமிழக அரசியலே தலைகீழாக போய்விடும் என்பது மட்டும் உண்மை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்..

English summary
Rumours spread that Ex DMK Senior Minsiters begin talks with former ADMK Ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X