பியூட்டி பார்லரில் பெண் மீது தாக்கிய முன்னாள் கவுன்சிலர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்
Recommended Video

பெரம்பலூர்: அழகு நிலையத்தில் பெண்ணின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் அங்கு பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த அழகு நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், சத்யாவை கடுமையாக தாக்கினார். ஏதோ பேசிக் கொண்டே அவர் சத்யாவை தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. பெண் என்றும் பாராமல் அவர் மீது செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கும் காட்சிகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் செல்வக்குமார் மீது திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வகுமார் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்த யுவராஜ் என்பவர் அங்கு பிரியாணி இல்லை என்று கூறிய ஊழியரை கடுமையாக தாக்கினார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications