அதிமுக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி காலமானார்
ஈரோடு: தமிழக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 52. ஈஸ்வரமூர்த்திக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெயசிம்மன், சஞ்சீவ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
தாராபுரம் தனித் தொகுதி ஈரோடு மாவட்டத்துடன் இணைந்திருந்தபோது, 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, கதர் மற்றும் கிராமத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஆகும். ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரமூர்த்தி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல்தகனம் நேற்று ஈரோடு மின்மயானத்தில் நடந்தது.
மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் பி.ஈஸ்வரமூர்த்திக்கு சுஜாதா என்ற மனைவியும், ஜெயசிம்மன், சஞ்சீவி என்ற 2 மகன்களும் உள்ளனர். ஜெயசிம்மன் கல்லூரியிலும், சஞ்சீவி பிளஸ்-2 வகுப்பிலும் படித்து வருகிறார்கள். ஈஸ்வரமூர்த்தி தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்துள்ளார். ஈஸ்வரமூர்த்தி மறைவுக்கு முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications