முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை- 3 பேர் கைது
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video

திருப்பூர்: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போய் விட்டார். இந்நிலையில் ஆம்பூரில் சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக இருந்தது. அதன் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் நின்றிருந்தனர்.
அப்போது ஆம்பூர் நெடுஞ்சாலை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த கார் அருகே சென்றபோது அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீஸார் எப்படியோ அவர்களை மடக்கிபிடித்தனர்.
விசாரணையில் பணம் கேட்டு சிவமூர்த்தியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடத்தியதாகவும் அவரை கொலை செய்துவிட்டு உடலை எங்கே வீசியெறிவது என்பது குறித்து தெரியாமல் சடலத்துடன் காரில் சுற்றி வந்ததாகவும் இறுதியாக உடலை ஓசூரில் வீசியதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த மணிபாரதி, விமல், கவுதம் ஆகியோர் என தெரியவந்தது.
திருப்பூர் சிவமூர்த்தியின் உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அருகே மீட்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications