2வது மனைவி நடத்தையில் சந்தேகம்... துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற மாஜி எம்.எல்.ஏ. அசோகன் கைது
சென்னை: 2-வது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற மாஜி எம்.எல்.ஏ.வும் அதிமுக தலைமை கழக பேச்சாளருமான திருவாரூர் அசோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் 2006ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் தற்போது அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறார்.

அசோகன், 2-வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன் ஹேமா நள்ளிரவில் பட்டினப்பாக்கம் போலீசில் ஓடிவந்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தமக்கும் கணவர் அசோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது தம்மை அசோகன் 2 முறை கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும் ஹேமா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அசோகன் மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் 2-வது மனைவி ஹேமா மீது அசோகன் 2 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் அவர் உயிர் தப்பியதாகவும் தெரியவந்தது. அத்துடன் அசோகன் வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டதை அப்பகுதி குடியிருப்புவாசிகளும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அசோகன் மீது கொலைமுயற்சி வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications