பெருகும் பலம்.. சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு
சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் பக்கம் என்று சசிகலா தரப்பு சொல்லிக் கொண்டிருந்த வேளையில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
"என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்" சசிகலா தரப்பினர் என்று சென்னை மெரினாவில் முதல்வர் ஓபிஎஸ் திடுக்கிடும் உண்மைகளை போட்டுடைத்தார். இதனால் அதிமுகவின் அரசியல் சூழ்நிலை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அரசியல் சூழலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, சசிகலா மீது அதிருப்தியுள்ள அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இந்நாள் எம்.பிக்கள் ஒ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எம்.பி மைத்ரேயன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று, அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இப்படி நாளுக்கு நாள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கும் நிலையில் சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications