‘ஜெ’விற்கு பிளாஸ்டிக் வாளியில் பால் ஊற்றிய சசி.. நட்பின் அடையாளமா இது.. முன்னாள் எம்எல்ஏ ஆவேசம்
ஜெயலலிதா இறுதிச் சடங்கின் போது பிளாஸ்டிக் வாளியில் பால் ஊற்றியதுதான் சசிகலாவின் 33 ஆண்டு கால நட்பின் பலன் என்று அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ மலரவன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஜெயலலிதாவின் தோழி என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கின் போது பிளாஸ்டிக் வாளியில் பால் ஊற்றுவதுதான் அவரின் 33 ஆண்டுகளாக நட்பிற்கு கிடைத்த பலனா என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீண்ட நாள் அதிமுக உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமாக இருந்தவர் மலரவன். இவர் தற்போது சசிகலாவின் தலைமையை ஏற்கவில்லை. சசிகலா குறித்து அவரது அதிருப்தியை தொலைக்காட்சி ஒன்றில் மலரவன் பேசிய போது, "இறுதி சடங்கின் போது, பித்தளை சொம்பிலோ, வெள்ளி சொம்பிலோதான் பால் ஊற்றுவார்கள். அதுதான் சம்பரதாயம்.

ஆனால் சசிகலா பிளாஸ்டிக் வாளியில் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பால் ஊற்றினார். இதுதான் 33 ஆண்டுகளாக நட்பின் பலனா? சசிகலாவிற்கு ஜெயலலிதா மீது என்ன விசுவாசம் இருந்தது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவை பாதுகாத்ததாக சொல்லும் சசிகலா, அவர் இறந்த ஒரு மாதத்திற்குள், பொதுச்செயலாளராக ஏன் ஆக வேண்டும் என்றும், அடுத்து முதல்வராக பொறுப்பேற்க ஏன் துடிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக தொடங்கியதில் இருந்து கட்சியில் இருந்த தன்னை போன்ற பலருக்கு பொதுக்குழுவுக்கான அழைப்பிதழைக்கூட அனுப்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள மலரவன், அவர்களுக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்துக்கொண்டு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், சசிகலாவிற்கு கட்சித் தொண்டர்களைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ கவலையில்லை என்றும் சசிகலாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications