ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு.. வாட்ஸ் அப்பில் விருப்பம் தெரிவித்த கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராயர்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவு பெருகி வருகிறது. முன்னாள் எம்எல்ஏ சுப்புராயர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
கம்பம்: கம்பம் முன்னாள் எம்எல்ஏ சுப்புராயர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் ஓபிஎஸ் வெளியிட்ட பகீர் தகவலை அடுத்து, சசிகலா மீது அதிருப்தியுள்ள அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இந்நாள் எம்.பிக்கள் ஒ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று, அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்று சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராயர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக நீடிக்க வேண்டும் என்று சுப்புராயர் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications