For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு

கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    Exam centres in Chennai are allotted to Kanniyakumari students

    இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் 2 தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு எதிராக உத்தரவை பிறப்பித்தது. இதனால் கடைசி நேரத்தில் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

    ரயில்களில் முன்பதிவு கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் நீட் தேர்வு எழுத கன்னியாகுமரி மாணவர்களுக்கு சென்னையில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் எத்தனையோ தேர்வு மையங்கள் இருந்தும் மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

    10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு காலை 7.30 மணிக்கு ஒரு பிரிவும், 8.30 மணிக்கு ஒரு பிரிவும் அனுமதிக்கப்படுகின்றனர். 3 மணி நேரம் தேர்வு எழுதவுள்ள நிலையில் 3 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

    இன்னும் சில தேர்வு மையங்களில் ஆதார் கார்டு கேட்டதாகவும் அது முக்கியமல்ல என விதிகளில் கூறப்பட்டுள்ளதாக பெற்றோர் வாக்குவாதம் செய்தவுடன் ஆதார் கார்டுகளை கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Today Neet exam is going to conduct throughout India. Exam centres in Chennai are allotted to Kanniyakumari students.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X