Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மண்ணைக் கவ்வினாலும்.. "டீசன்ட்"டான தோல்வியாகத்தான் இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு நிறுவனங்களின் "எக்சிட் போல்" எனப்படும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பார்க்கும்போது அதிமுக ஆட்சியைப் பறி கொடுத்தாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் உருவெடுக்கும் என்றே தெரிகிறது. இது நிச்சயம் திமுகவுக்கு சவாலானதுதான்.

தமிழக மக்களின் மன நிலையைக் கணிப்பது என்பது பெண்ணின் மனதில் என்ன உள்ளது என்பதை கணித்துக் கூறுவதற்குச் சமம். எனவேதான் தமிழக தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை.

நேற்று கூட வாக்குப் பிந்தையை கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட தமிழக மக்களின் மனதைக் கணிப்பது மிக மிக கடினம் என்று கூறிக் கொண்டேதான் முடிவுகளை சொன்னார்கள். அந்த அளவுக்கு இந்த கணிப்புகளில் ரிஸ்க் உள்ளது என்பது அனைவரும் உணர்ந்த உண்மைதான்.

நேற்று வெளியான அனைத்துக் கணிப்புகளையும் பார்த்தபோது ஒரு உண்மையை உணர முடிந்தது. என்னதான் அதிமுக ஆட்சியை இழந்தாலும் அதன் பலம் போகவில்லை என்பதும், அது பலமான ஒரு எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமரப் போகிறது என்பதே அது.

எல்லாமே 90க்கு மேல்தான்

எல்லாமே 90க்கு மேல்தான்

நேற்று வெளியான அனைத்து எக்சிட் போல் முடிவுகளிலும் சொல்லி வைத்தாற் போல 80க்கும் மேற்பட்ட தொகுதிகளைத்தான் அனைவருமே அதிமுகவுக்கு கணித்துள்ளனர். சிலர் மட்டுமே 80 என்று சொல்லியுள்ளனர். பெரும்பாலான முடிவுகளில் 90க்கும் மேல்தான் கணித்துள்ளனர்.

கேவலமான தோல்வி இருக்காது

கேவலமான தோல்வி இருக்காது

இந்தியாடுடே எக்சிட் போலில் அதிமுகவுக்கு 95 இடஙகள் கிடைக்கும் என கணித்துள்ளனர். நியூஸ் நேஷன் 97 இடங்களைக் கணித்துள்ளது. நியூஸ் எக்ஸ் கணிப்பு 90 இடங்களாகும். ஏபிபி நீல்சன் கணிப்பு 95 ஆகும். போல் ஆப் போல்ஸ் 103 இடங்கள் கிடைக்கும் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.

பலம்தான்

பலம்தான்

இதில் கணித்துள்ளது போல 90 சீட்டுகளை அதிமுக பெறுமானால் அது நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் திமுகவுக்கு சவாலானதாகவே இருக்கும். காரணம், சட்டசபையை ஒரு நாள் கூட சுமூகமாக நடத்த விடாது அதிமுக.

திமுகவை விட பரவாயில்லையே

திமுகவை விட பரவாயில்லையே

மேலும் கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மொத்தமாக சேர்த்தே 31 இடங்கள்தான் கிடைத்தன. அதை ஒப்பிட்டுப பார்த்தால் அதிமுக தனித்தே இத்தனை இடங்களைப் பிடிப்பது என்பதே மிகப் பெரிய சாதனைதான்.

எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்

எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும்

அதை விட முக்கியமாக, அதிமுகவுக்கு கணிப்புகளில் கூறியுள்ளது போல 80 இடங்களுக்கு மேல் கிடைத்தால், அக்கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்கும். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா (ஜெயித்தால்) உட்காரும் வாய்ப்பும் உருவாகும். ஆனால் கடந்த சட்டசபையில் திமுகவால் அந்த பலத்தைக் கூட பெற முடியாமல் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

தோல்வியாகவே இருந்தாலும்

தோல்வியாகவே இருந்தாலும்

மொத்தத்தில் இந்த கணிப்புகளைப் பார்க்கும்போது அதிமுக ஆட்சியைப் பறி கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதேசமயம், அது பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கிறது என்ற உண்மையையும் நமக்கு உணர்த்தியுள்ளது.

இப்போதாவது மக்களுக்கு உழைக்குமா?

இப்போதாவது மக்களுக்கு உழைக்குமா?

ஒருவேளை இதில் கணித்துள்ளபடி பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்தால், இப்போதாவது மக்களுக்காக வியர்வை சிந்தி அதிமுக பாடுபட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். காரணம், இப்படித்தான் 2006 சட்டசபைத் தேர்தலில் அதிமுக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக (69 இடங்களை வென்றது) அமர்ந்தது. உருப்படியாக மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட அது அப்போது கிள்ளிப் போடவில்லை என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+