கவலையை விடுங்க.. கொடையை எடுங்க மக்களே.. 2 நாளைக்கு செம்ம மழை.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

    சென்னை: தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைப்பகுதியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாளைக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல அதிகாரி பாலச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    மிக கனமழை

    மிக கனமழை

    இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து நிலவுகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

    அதிகபட்ச மழை

    அதிகபட்ச மழை

    அதிக பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் மண்டபத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும்.

    8 மாவட்டங்களில்

    8 மாவட்டங்களில்

    மிக கனமழையை பொறுத்த வரையில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்மிக கனமழை பெய்க்ககூடும்.

    சென்னையில் கனமழை

    சென்னையில் கனமழை

    கனமழையை பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    கடலுக்கு செல்ல வேண்டாம்

    மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், மத்திய மேற்கு வங்கக்கடலில், இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு மழை தொடரும்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+