கடைசில பேஸ்புக்கிற்கும் ஆதார் கார்ட் வேணுமாம்.. மிஸ்டர்.மார்க் உங்களுக்கே இது நியாயமா?
பேஸ்புக்கில் புதிய கணக்கு துவங்கும் சிலரிடம் ஆதார் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: பேஸ்புக்கில் புதிய கணக்கு துவங்கும் சிலரிடம் ஆதார் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஆதார் விவரங்கள் இன்னும் சில நாளில் அனைவரிடமும் கேட்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
பேஸ்புக்கின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் சிலர் இதனால் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதார் விவரங்கள் கேட்பது மட்டும் இல்லாமல் ஆதாரில் இருப்பது போல பெயர் வைக்க வேண்டும் என்றும் பேஸ்புக் கேட்டு இருக்கிறது.

பேஸ்புக் பாதுகாப்பு
பேஸ்புக்கில் மிகவும் அதிக அளவில் பொய்யான கணக்குகள் இருப்பதாக இரண்டு வருடத்திற்கு முன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து பேஸ்புக் ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதன்படி பேஸ்புக்கில் தமிழ் பெயர் வைத்து இருந்தவர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது. மேலும் பலரிடம் பாஸ்போர்ட் விவரங்கள் கேட்டு உண்மையான ஐடியா என்று சோதித்தது.

ஆதார்
தற்போது இந்தியாவில் இந்த சோதனையை புதிய முறையில் செய்ய இருக்கிறது பேஸ்புக். அதன்படி பலரிடம் ஆதார் விவரங்களை கேட்டு உள்ளது. இன்னும் சில நாளில் ஆதார் கார்டுடன் பேஸ்புக் கணக்கை இணைக்க வேண்டும் என்று கூற வாய்ப்பு இருக்கிறது. பொய்யான கணக்குகளை கண்டுபிடிக்க இப்படி செய்யப்பட உள்ளது.

எப்போது
தற்போது புதிய கணக்கு தொடங்கும் சிலரிடம் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றபடுகிறது. அதுவும் கூட ''ஆதாரில் இருக்கும் படி உங்கள் பேஸ்புக் பெயர் இருந்தால், நண்பர்களால் எளிதாக உங்களை கண்டுபிடிக்க முடியும்'' என்று மிகவும் பணிவான கோரிக்கை மட்டுமே இப்போதைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கண்டிப்பாக இன்னும் சில நாளில் எல்லோரிடமும் இந்த விவரம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.
கோபமான மக்கள்
இதுகுறித்து மக்கள் கோபமாக கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதில் ''நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் உடனடியாக அதை விட்டு சென்று விடுங்கள். அதேபோல் டிவிட்டர் ஆதார் கார்ட் கேட்டாலும் டிவிட்டரை விட்டு செல்ல வேண்டும். பேஸ்புக் நிறுவனர் ஒன்றை உணரவேண்டும், பேஸ்புக் மக்களுக்கானது, மக்கள் ஒன்றும் பேஸ்புக்கிற்கானவர்கள் இல்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications