"சின்னம்மா" பதவி... சமூக வலைதளங்களில் சசிகலா, தீபா, செளமியா அன்புமணியை மோதவிடும் ஆதரவாளர்கள்!
சமூக வலைதளங்களில் சின்னம்மா என்ற பெயரில் சசிகலா, தீபா, செளமியா அன்புமணி ஆதரவாளர்கள் ஏகப்பட்ட பக்கங்களை உருவாக்கி உள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அன்புமணியின் மனைவி செளமியா ஆகிய 3 பேரின் ஆதரவாளர்களுமே 'சின்னம்மா' உரிமை கோரி ஃபேஸ்புக் பக்கங்களை தொடங்கியுள்ளதால் சமூக வலைதளங்கள் ரணகளமாகி கிடக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது உதவியாளர் விகே சசிகலா, 'சின்னம்மா'வாக உருவாக்கப்பட்டார். ஆனால் அதிமுக தொண்டர்களோ ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைத்தான் 'சின்னம்மா' என அழைத்து வருகின்றனர்.

சின்னம்மா பேரவை
சமூக வலைதளங்களிலும் சசிகலா, தீபா ஆகியோருக்கு ஆதரவாக பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் சின்னம்மா பேரவை, சின்னம்மா தீபா சின்னம்மா, குவைத் சின்னம்மா பேரவை என போட்டி போட்டுக் கொண்டு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சின்னம்மா பாசறை
சின்னம்மா தொண்டர் படை என்ற பக்கம் கூட உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னம்மா பாசறை, சின்னம்மா புரட்சி படை, தியாகச் செம்மல் சின்னம்மா என ஏகப்பட்ட பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

சின்னம்மா செளமியா
இந்த சின்னம்மா சரண கோஷத்தில் பாமக எம்பி அன்புமணியின் மனைவி செளமியாவும் சேர்க்கப்பட்டுள்ளார். பசுமை நாயகி , பசுமை இளவரசி" சின்னம்மா சௌமியா அன்புமணி என்ற பெயரிலும் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் பேரவை
சின்னம்மா களேபரம் இப்படி வெடித்துக் கொண்டிருக்க சப்தமே இல்லாமல் 'அம்மாவின் விசுவாசி ஓபிஎஸ் பேரவை' என்ற பெயரிலும் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் சசிகலாவுக்கு எதிரான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications