நேரு பிறந்த நாளில் ஒன்றாக இணைந்த 'காங்கிரஸ் கோஷ்டிகள்"
சென்னை: நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜஹவர்லால் நேருவின் 125வது பிறந்த நாளை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடினர்.
சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு படத்துக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் உறுதி மொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.ஆரூண், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, வசந்தகுமார், செல்லக்குமார், கராத்தே தியாகராஜன் என அனைத்து கோஷ்டிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ஆசியாவின் ஜோதி, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக நாடு முழுவதும் பாரதிய ஜனதா கொண்டாடி இருக்க வேண்டும் என்றார்.
வாசன் கட்சி
சென்னை ஆழ்வார்பேட்டை நாகேஸ்வரராவ் பூங்கா அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நேருவின் படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications