வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். இதில் தேர்தல் பாதுகாப்புக்கு தேவையான துணை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வாக்குச் சாவடிகளில் செய்து தரவேண்டிய வசதிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ராஜேஷ் லக்கானி கூறினார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்து போனவர்களின் பெயர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருந்த பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் போலி வாக்காளர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜேஷ் லக்கானி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டிருந்த பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் என இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
சுமார் 62 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஒரே வாக்குச்சாவடியில் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 62 ஆயிரம் மாற்றத் திறனாளிள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஒரே வாக்குச்சாவடியில் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.
சட்டசபைத் தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications