போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

Subscribe to Oneindia Tamil

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்ஸ்பெக்டர் என கூறி பணம், நகைக்களை மோசடி செய்த பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Fake woman police inspector arrrested near Madurai

திருப்புவனம் கீழரத வீதியில் முனியசாமி என்பவர் மனைவி ஜான்சிராணி (31) வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். பிஎஸ்சி பட்டதாரியான இவர் திருப்புவனத்தில் உள்ள சுதா ஜுவல்லர்ஸ் என்ற நகைகடையில் திண்டுக்கல்லில் பெண் இன்ஸ்பெக்டராக இருப்பதாக கூறி அறிமுகமாகியுள்ளார். தனக்கு நகை வேண்டும் என கூறி கடந்த மே மாதம் ஒரு பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, வெள்ளி அரைஞான் கயிறு, அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம் வாங்கியுள்ளார்.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 49,000. இதில் ரூ. 10,000 மட்டும் கொடுத்துவிட்டு மீதி பின்னால் தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி தரவில்லை.நகை கடை உரிமையாளர் கண்ணன் கேட்டதற்கு இன்ஸ்பெக்டரிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து கண்ணன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். விசாரணைக்கு வக்கீலுடன் வந்த ஜான்சிராணி இன்ஸ்பெக்டரிடம் தான் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் என கூறி கையை குலுக்கியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் விசாரணையின் போது கோவை உக்கடத்தில் 2004ல் பணிபுரிந்ததாக கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உக்கடத்தில் எஸ்ஐயாக இருந்தவர்

இதே ராஜ்குமார். எந்த பிரிவு என கேட்க குற்றப்பிரிவு என கூறியுள்ளார். இன்ஸ்பெக்டராக எப்படி பதவி உயர்வு பெற்றீர்கள் என கேட்க சிறப்பு பதவி உயர்வு என கூறியுள்ளார். தொடர் விசாரணையில் பல இடங்களில் இப்படி இன்ஸ்பெக்டர் என கூறி மிரட்டியது தெரியவந்துள்ளது.

Fake woman police inspector arrrested near Madurai

ஜான்சிராணிக்கு மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பையாவுடன் ஏழு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளது.

இரண்டு குழுந்தைகளையும் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தினசரி கொண்டு போய்விடும் போது அங்கு ஆசிரியராக பணியாற்றிய முனியசாமியை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

ஜான்சிராணியின் சொந்த ஊர் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து ஆகும். எப்போதும் சொகுசு காரில்தான் வலம் வருவார். திருப்புவனத்தில் பலரிடமும் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.திருப்புவனம் போலீசார் முதலில் நகைகடை உரிமையாளர் கண்ணனின் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+