செளதியில் 6 மாதமாக உணவு, ஊதியமின்றி கொத்தடிமைகளாக தத்தளிக்கும் 61 தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை
ராமநாதபுரம்: செளதியில் 6 மாத காலமாக உணவு, ஊதியமின்றி கொத்தடிமைகளாகத் தவிக்கும் 61 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது உறவினர்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 61 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் செளதி அரேபியாவில் உள்ள அல்ஜூபைல் நகரில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை தனியார் நிறுவனத்தினர் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். மேலும் சரியான உணவு கொடுக்காமல் அவர்களை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் தெரிகிறது.

கடந்த 6 மாதமாக 61 மீனவர்களுக்கும் எந்தவித ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் மீனவர் குடும்பத்தினர் வறுமையில் வாடி தவிக்கிறார்கள்.
61 மீனவர்களையும் மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி, ராமநாதபுரம் மாவட்டத்தின் 7 கிராம பொதுமக்களும், மீனவ குடும்பத்தினரும் இன்று மாவட்ட ஆட்சியர் நடராஜனை சந்தித்து மனு கொடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சகாயம் ஆதரவாளர்கள் அமைப்பான மக்கள் பாதை செய்திருந்தது.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications