இரும்பு ராடால் மருமகன் தலையைப் பிளந்த மாமனார்.. பதிலுக்கு அரிவாளால் வெட்டிய மருமகன்!
தாம்பரம் அருகே மகளிடம் தகராறு செய்த மருமகனை மாமனார் இரும்பு ராடால் அடித்து மண்டையை பிளந்ததால் ஆத்திரமடைந்த மருமகன் அவரை அரிவாளால் வெட்டினார்.
தாம்பரம்: சென்னை தாம்பரம் அருகே மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்ததால் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
கிழக்கு தாம்பரம் மோதிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ரூபின்சன் (59). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மகள் புஷ்பராணி, அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். கடந்த வாரம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்பராணி கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதனால் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நேற்று இரவு மாமனார் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார் அழைத்தார். அதற்கு பிரான்சிஸ் ரூபின்சன் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ் இரும்பு ராடை எடுத்து மருமகன் மண்டையில் ஓங்கி அடித்தார்.
இதனால் கோபமடைந்த சதீஷ் குமார், மாமனாரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரூபின்சன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications