வாரிசு அரசியல் தான் திமுகவின் சமூகநீதி.. போட்டுத்தாக்கும் தமிழிசை சவுந்தரராஜன்
வாரிசு அரசியல் தான் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் சமூக நீதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: வாரிசு அரசியல் தான் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் சமூக நீதி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக கருத்துக் கூறியிருந்த ஸ்டாலினையும் தமிழிசை வெளுத்து வாங்கியுள்ளார்.
காலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிசை காரசாரமான பதிவுகளை பதிவிட்டுள்ளார். ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

அணைகள் கட்டினாரா?
அதாவது, திமுகஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கிலப் பள்ளி கட்டியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பொறியியல்,மருத்துவக்கல்லூரிகள் கட்டியதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கே எதிர்த்தோம்? பொய்யர்களே?
மோடி அரசுக்கு எதிராக கீழடி பற்றி பேசிய ஸ்டாலின், கம்யூனிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாங்கள் கீழடி அகழாய்வு பணியை எங்கே எதிர்த்தோம்? பொய்யர்களே? என்றும் தமிழிசை விளாசியுள்ளார்.

இலங்கை இறுதிப்போரில்
"நீட் தேர்வு"-நம்ப வைத்து கழுத்தறுத்த மத்தியரசு என ஸ்டாலின் கூறியதற்கும் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இறுதிப்போரில் போர் நின்றுவிடும் என நம்பவைத்து சரண் அடைய செய்தது திமுக ஆட்சிதான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வாரிசு அரசியல்தான் சமூகநீதி?
வாரிசு அரசியல் குடும்ப ஆட்சிதான் திமுக, திக, பாமக பேசும் சமூக நீதி? என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மக்களை ஏமாற்றவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications